I தீமோத்தேயு 3:9 - விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்.
I Timothy 3:9 - Holding the mystery of the faith in a pure conscience.
ஏசாயா 30:15 - நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்;
Isaiah 30:15 - For thus saith the Lord GOD, the Holy One of Israel; In returning and rest shall ye be saved; in quietness and in confidence shall be your strength: and ye would not.
யாக்கோபு 5:15 - அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்
James 5:15 - And the prayer of faith shall save the sick, and the Lord shall raise him up; and if he have committed sins, they shall be forgiven him.
நியாயாதிபதிகள் 6:23 - அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.
Judges 6:23 - And the LORD said unto him, Peace be unto thee; fear not: thou shalt not die.
யாத்திராகமம் 33:14 - அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
Exodus 33:14 - And he said, My presence shall go with thee, and I will give thee rest.
I யோவான் 3:3 - அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.
I John 3:3 - And every man that hath this hope in him purifieth himself, even as he is pure.
சங்கீதம் 37:3 - கர்த்தரை நம்பி நன்மை செய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
Psalm 37:3 - Trust in the LORD, and do good; so shalt thou dwell in the land, and verily thou shalt be fed.
சங்கீதம் 92:12 - நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
Psalm 92:12 - The righteous shall flourish like the palm tree: he shall grow like a cedar in Lebanon.
நீதிமொழிகள் 24:6 - நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.
Proverbs 24:6 - For by wise counsel thou shalt make thy war: and in multitude of counsellors there is safety.
ஏசாயா 45:2 - நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
Isaiah 45:2 - I will go before thee, and make the crooked places straight: I will break in pieces the gates of brass, and cut in sunder the bars of iron:
சங்கீதம் 62:5 - என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.
Psalm 62:5 - My soul, wait thou only upon God; for my expectation is from him.
சங்கீதம் 119:81 - உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
Psalms 119:81 - My soul fainteth for thy salvation: but I hope in thy word.
ஏசாயா 43:11 - நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
Isaiah 43:11 - I, even I, am the LORD; and beside me there is no saviour.
சங்கீதம் 33:20 - நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
Psalm 33:20 - Our soul waiteth for the LORD: he is our help and our shield.
ஏசாயா 58:11 - கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
Isaiah 58:11 - And the LORD shall guide thee continually, and satisfy thy soul in drought, and make fat thy bones: and thou shalt be like a watered garden, and like a spring of water, whose waters fail not.
நீதிமொழிகள் 20:22 - தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.
Proverbs 20:22 - Say not thou, I will recompense evil; but wait on the LORD, and he shall save thee.
சங்கீதம் 122:7 - உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.
Psalm 122:7 - Peace be within thy walls, and prosperity within thy palaces.
ரோமர் 13:10 - அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
Romans 13:10 - Love worketh no ill to his neighbour: therefore love is the fulfilling of the law.
சங்கீதம் 84:11 - தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
Psalm 84:11 - For the LORD God is a sun and shield: the LORD will give grace and glory: no good thing will he withhold from them that walk uprightly.
I பேதுரு 5:5 - அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
I Peter 5:5 - Likewise, ye younger, submit yourselves unto the elder. Yea, all of you be subject one to another, and be clothed with humility: for God resisteth the proud, and giveth grace to the humble.